Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
Notice Board
2019-04-13 Wish you a peaceful, happy and prosperous Tamil & Sinhala new year!
   
 
Latest event
 
[2019-04-13 18:03:53]
 
 
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு
 
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு - [2019-04-13 17:59:16]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக பதவியேற்ற உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு பிரதான மண்டபத்தில் 01.04.2019 அன்று நடைபெற்றது. மேற்படி வரவேற்பு மற்றும் கௌரவிப்பை மாணவர்கள், கல்வியியலாளர் கழகம் மற்றும் கல்விசாரா ஊழியர் கழகம் என்பன மேற்கொண்டன.

(More Details)
மணி விழா - [2019-03-29 22:41:09]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் மணிவிழா 29.03.2019 அன்று மணிவிழாச் சபை தலைவர் கருமத்திருதி வைத்திய கலாநிதி வை. தியாகராஜா தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரை, வாழ்த்துரைகள், அமிர்தம் மணிவிழா மலர் வெளியீடு, விழா நாயகர் கௌரவிப்பு, விழா நாயகர் ஏற்புரை, நன்றியுரை என்பன நடைபெற்றன

(More Details)
பட்ட நிறைவு விழா - 2019 - [2019-03-28 17:23:07]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 16ம் அணி முகிழ் நிலை ஆசிரிய மாணவர்களின் பட்ட நிறைவு விழா 28.03.2019 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி உயர் திரு கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் திரு திரு. மு. செல்வஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

(More Details)
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு விழா 2019 - [2019-03-25 00:15:37]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு விழா கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு. சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில் 11.03.2019 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண உதவி உடற்கல்விப் பணிப்பாளர் திரு R.ராஜசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக லயன் வை. தியாகராஜா, கஜமுகன் ஹாட்வெயார் முகாமையாளர் திரு E.S.P நாகரத்னம், ஐங்கரன் வெதுப்பக முகாமையாளர் திரு S. பொன்குமார் மற்றும் முறைசாராக் கல்விக்கான மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு.T . சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் வருடத்திற்கான விளையாட்டுப் போட்டியில் “ பேராசிரியர் கைலாசபதி இல்லம்” முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது. “பேராசிரியர் துரைராஜா இல்லம்”, “பேராசிரியர் வித்தியானந்தன் இல்லம்”, “பேராசிரியர் சந்திரசேகரம் இல்லம்” போன்றன முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களைத் தட்டிக் கொண்டன.

(More Details)
மகா சிவராத்திரி விழா 2019 - [2019-03-25 00:08:26]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மகா சிவராத்திரி விழா கல்லூரியின் பீடாதிபதி; உயர்திரு. சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில் 04.03.2019 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பீடாதிபதி; உயர்திரு. சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினராக IBC ஊடகவியலாளர் திரு உசாந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் வருடத்திற்கான மகா சிவராத்திரி விழாவானது பாடல், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளின் சங்கமத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

(More Details)
“அழகெழல் – 2019” - [2019-02-10 23:34:54]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் நுண்கலை மன்றத்தின் “அழகெழல்” நிகழ்வானது 08.02.2019 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் தலைவர்: உயர்திரு. கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம்(பீடாதிபதி) பிரதம விருந்தினர்கள்: Hon.Mr.K.M.H. Bandara (Chief Commissioner, Teacher Education, MOE) சிறப்பு விருந்தினர் Dr. Lion. Y. Thiyagarajah (Senior Member of Advisory Board) Artist Vel Ananthan (Former Dupty Director of Education, North-East Province) கௌரவ விருந்தினர்: Mr. Selva Selvaramanan. Teacher, Chavakacheri Hindu College. மிகச்சிறப்பாக நடைபெற்ற விழாவில் கலைநிகழ்வுகள், சித்திரக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா என்பன இடம்பெற்றது.

(More Details)
 
 
 
 
 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com