Home About Us Mission & Vision Our President Photo Gallery Research & Publication Contact Us Teachers Login
 
Home » 
History » 
Anthem » 
Our President
 
Management committee » 
Academic staff » 
Non Academic staff » 
Former Presidents » 
Photo Gallery » 
Guest Book » 
View Guest Book » 
Curriculum activities » 
Co –curriculum activities » 
Prospective teachers » 
Internship activity » 
Our Courses » 
Contact Us » 
View Students » 
 
National Colleges
of Education
SRI LANKA
 
Notice Board
2019-10-07 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அனுமதி – 2018 / 2019 தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் படிவங்கள்
2019-10-12 Registration of Students
   
 
Latest event
 
[2019-10-16 19:38:57]
 
 
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு – 2019
 
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு – 2019 - [2019-10-16 19:37:48]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 16.10.2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண மேல்; நீதிமன்ற நீதிபதி கௌரவ அன்னலிங்கம் பிரேம்சங்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து புதிய மாணவர்களுக்கான பதிவுகள் நடைபெற்றது.

(More Details)
வாணி விழா 2019 - [2019-10-08 19:02:23]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 2019ம் ஆண்டுக்கான “வாணி விழா” நிகழ்வானது 07-10-2019 அன்று மதியம் 12.30 மணியளவில் யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி விஜயகுமாரி முருகேசப்பிள்ளை ( விரிவுரையாளர், ஆசிரிய மத்திய நிலையம், மானிப்பாய்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிகழ்வுகளின் வரிசையில் நவராத்திரி நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

(More Details)
உலக ஆசிரியர்தினம் --- 2019 - [2019-10-05 17:47:11]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கலாசார மன்றத்தினரால் நடாத்தப்பட்ட உலக ஆசிரியர்தின விழாவானது 05.10.2019 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கலாசார மன்றத்தலைவர் திரு. தொபியாஸ் கலிஸரஸ் நிராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மடு வலயக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு க. சத்தியபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக உயர்திரு தி. நிரோஸ்( தவிசாளர், வலிவடக்கு பிரதேச சபை) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பீடாதிபதிஇ உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மாணவ ஆசிரியர்களால் விரிவுரையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கலைநிகழ்வுகள் இடமபெற்றன.

(More Details)
சூழல் நேயச்செயற்றிட்டம் - [2019-10-05 17:29:48]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் சூழல் நேயச்செயற்றிட்டம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி திரு சு பரமானந்தம் அவர்களின் தலைமையில் சூழல் மன்றத்தின் உப காப்பளர் திரு நா.அம்பிகைபாகன் ஒழுங்குபடுத்தலில் 04.10.2019 காலை 9.00மணிக்கு ஆசிரிய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், பொதுமக்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் பங்கேற்றலுடன் சிறப்புற மரம் நடுகை வைபவம் கல்லூரியின் முன்பாக இடம்பெற்றது

(More Details)
தூய குடி நீர் சுத்திகரிப்புப் பொறிமுறையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு - [2019-10-03 17:07:42]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தூய குடி நீர் சுத்திகரிப்புப் பொறிமுறையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 03.10.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இதை அமைப்பதற்குரிய நிதியீட்டத்தை AL HIMA ISLAMIC SERVICES, SRI LANKA எனும் தொண்டு நிறுவனமானது Kuwait நாட்டிலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் மேற்கொண்டது.

(More Details)
திருக்குறள் நூல் அறிமுக விழா - [2019-10-03 17:04:23]

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திருக்குறள் நூல் அறிமுக விழா பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 03.10.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றமும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ”திருக்குறள்” , ”திருக்குறள் ஆய்வுகள்” , ”முப்பாற்சுருக்கம்” , பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட ”தமிழ்ப்பழமொழிகள்” ஆகிய நூல்களின் அறிமுக விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. விழாவின் சிறப்பம்சமாக விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரிய மாணவர்களுக்கும் , விரிவுரையாளர்களுக்கும் மேற்படி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. விழாவின் பிரதமவிருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பழமொழிகள் எனும் தலைப்பில் தமிழ் மன்றக்காப்பாளர் திரு. பா. பாலகணேசன் அவர்களும் திருக்குறள் என்னும் தலைப்பில் விரிவுரையாளர் திரு சி.சிவசங்கர் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

(More Details)
 
 
 
 
 
  © 2008 Jaffna National College of Education Web design by : OrioleSys.com